சூரிய  ஒளியுடன்  கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வரைவோலை வழங்கும் நிகழ்ச்சி!

File Photo.

File Photo.

cheyyar bdo sign

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் 2016-2017-ம் ஆண்டிற்கான சூரிய ஒளியுடன்  கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 55 பயனாளிகளில், முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 38 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் வரைவோலையாக  வழங்கப்பட்டன. செய்யாறு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்    தூசி கே.மோகன் இன்று (13.06.2017) மாலை 3.00 மணிக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் பா.காந்திமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) செ.குப்புசாமி, உதவிப் பொறியாளர்கள் மாதவன், வெங்கடாசலபதி மற்றும் பணிபார்வையாளர்கள் உடனிருந்தனர்.

                                   –  ச.ரஜினிகாந்த்.