மாநில சட்ட ஆணையத்தை திருத்தியமைத்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ளார். அதன்படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் நாகப்பன் மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாநில சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும். ஆணையத்தின் பிற உறுப்பினர்கள் பின்னர் நியமிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதன் முதலாக, கடந்த 1994-ம் ஆண்டு, மாநில சட்ட ஆணையம், அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் செயல்பட்டது. மீண்டும் திருத்தியமைக்கப்பட்ட சட்ட ஆணையம், கடந்த 2002-ம் ஆண்டுடன் முடிவுற்றது.
இந்நிலையில், மாநில சட்ட ஆணையத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, மாநில சட்ட ஆணையத்தை திருத்தியமைக்க, 2014-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அப்பதவி காலம் நிறைவடைந்த நிலையில், தற்போது மறுபடியும் மாநில சட்ட ஆணையம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com