6 அடி அகலமும்,   60 அடி நீளமும்,  9 அடி தடிமனும் கொண்ட பிரம்மாண்டமான பெருமாள் சிலை பெங்களுர் செல்ல தயாராகி வருகிறது!

IMG-20170618-WA0011 IMG-20170618-WA0008 IMG-20170618-WA0009

IMG-20170618-WA0010

IMG-20170618-WA0012

திருவண்ணமலை மாவட்டம், வந்தவாசி தாலுக்கா தெள்ளார் ஒன்றியம், தேசுர் அருகில் இருக்கும் கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து, ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான பெருமாள் முகம் கொண்ட சிலை, சில தினங்களில் பெங்களுர் செல்ல தயாராகி வருகிறது.

இச்சிலை 6 அடி அகலமும்,  60 அடி நீளமும்,  9 அடி தடிமனும் கொண்டது. (பீடம் அளவு தனி)  இந்த  சிலையை ஏற்றிச் செல்லும் லாரியின் டயர் எண்ணிக்கை மட்டும் 160. எந்த பாலத்தின் மீதும் செல்ல முடியாது, சென்றால் பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளது   என்கின்றனர்.

கொரக்கோட்டையில் இருந்து சிலையை ஏற்றிக்கொண்டு செய்யாறு, ஆற்காடு வழியாக லாரி பெங்களுர் செல்ல இருக்கிறது.

இந்த லாரி ஒரு நாளைக்கு இரவில் 4   கிலோ மீட்டர்  தூரம் மட்டுமே பயணம் செய்ய முடியும். பெங்களுர்  செல்ல 45 நாட்களில் இருந்து 60 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் அரசின் அனுமதியோடு இதற்காக தனி பாதை அமைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சில இடங்களில் வீடுகளை இடித்து லாரி  சென்ற பிறகு  வீடு கட்டித்தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.   

இவ்வளவு சிரமத்திற்கிடையில் இச்சிலையை கொண்டு செல்ல வேண்டுமா? என்ற எதிர்ப்பு குரலும் இதற்கிடையில் இங்கு ஒலிக்கத்தான் செய்கிறது.

-ச.ரஜினிகாந்த்.