புதுக்கோட்டை மாவட்டம், தஞ்சை – புதுக்கோட்டை இடையே உள்ள மச்சுவாடி என்ற இடத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் கடைகளை அகற்றுவதற்காக அதிகாரிகள் வந்திருந்தனர்.
புதுக்கோட்டை நகரபகுதிக்கு மட்டும் அறிவிப்பு கொடுத்துவிட்டு அறிவிப்பு கொடுக்கப்படாத இடமான தஞ்சை – புதுக்கோட்டை இடையே மச்சுவாடி டான்ஸி அருகே உள்ள பட்டா நிலைத்தையும் சேர்த்து அகற்ற அதிகாரிகள் வந்தனர். இதனை எதிர்த்து டான்ஸி பகுதியில் வாழும் மக்கள் அங்கு வந்த அதிகாரிகளிடம் அறிவிப்பு இல்லாமல் எப்படி நீங்கள் எங்கள் இடத்தையும் இடிக்க வரலாம்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு வந்திருந்த அதிகாரிகள் திரண்டிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அதிகாரிகள் அறிவிப்பு செய்த பகுதியை மட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
-கே.பி.சுகுமார்.
படங்கள் : ச.ரஜினிகாந்த்.