திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள BSNL ஊழியரும், மூத்த தொழிற்சங்கத் தோழருமான S.M.சேகர் பணி ஓய்வுப் பாராட்டு விழா, மாநில உதவி பொதுச் செயலாளர் R.கருமலையான் மற்றும் கிளைத்தலைவர் T.மதியழகன் ஆகியோர் தலைமையில் இன்று மதியம் 12.25 மணி அளவில் சிறப்புடன் நடைபெற்றது.
பணி ஓய்வுப் பெற்ற S.M.சேகர் 1992–ல் களம்பூரில் RM ஆக DOT –ல் பணியில் சேர்ந்து, ஆரணி பகுதியில் ஏறத்தாழ 25 ஆண்டு காலம் பணி முடித்து BSNL –லிருந்து 2017 ஜீன் 30-ம் தேதி அன்று பணி ஒய்வு பெறுகிறார்.
BSNL ஊழியர் சங்கம் 2002-ல் தொடங்கப்பட்ட காலம் தொட்டு இடையறாது சங்கப் பணியாற்றியுள்ளார். BSNL ஊழியர் சங்கத்தை விழுதுகள் பரப்பி நிற்கும் ஆல விருட்சமாக வளர்த்தெடுத்த பெருமை இவருக்கு உண்டு. இப்பணி நிறைவு விழாவிற்கு மாவட்டத்தலைவர் S.சிவலிங்கம் மற்றும் கிளைச்செயலாளர் B.மாரிமுத்து முன்னிலை வகித்தார். இவ்விழாவில் தமிழ் மாநில செயலாளர் A.பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். தொழிற்சங்கத் தோழர்கள் மற்றும் (BSNL) சக ஊழியர்கள் கலந்து கொண்டு பாராட்டினார்கள்.
-மு.ராமராஜ்.
– ச.ரஜினிகாந்த்.