திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் கடந்த 60 வருடமாக பராமரித்து வந்தனர். அதனை தற்போது வேடன் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த கோவிலில் வேலைப் பார்த்த அர்ச்சகர் பரமசிவத்தின் நடவடிக்கை கோவில் நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லை என கோவில் நிர்வாகி வேடன் அவரை நீக்கியுள்ளார்.
இந்நிலையில் அர்ச்சகர் பரமசிவம் கோவிலில் உண்டியல் வைத்து பொது மக்களிடமிருந்து காணிக்கை பெறுவதாகவும், கோவில் நிர்வாகத்தின் மீது இந்து அறநிலையத்துறையில் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே முத்துமாரியம்மன் கோவிலுக்கு அறங்காவலர் நியமனம் செய்துள்ளார்களா? என்பது சம்மந்தமாக இந்து அறநிலையத்துறைக்கு புகார் வந்துள்ளது, அதன் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு நிழுவையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி, துவாக்குடி அண்ணா வளைவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகத்தை திருவெறும்பூர் மலைக்கோவில் செயல் அலுவலர் கையகப்படுத்துமாறு கடந்த 24-ம் தேதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மலைக்கோவில் செயல் அலுவலர் ஹேமாவதி, செயல் அலுவலர்கள் ஜெய்கிஷான், சுரேஷ், ஜெயலதா, அருண்பாண்டியன், ஆய்வாளர் தமிழ்செல்வி ஆகியோர் கடந்த 24-ம் தேதி முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர்.
ஆனால் கோவில் பூட்டப்பட்டிருந்தை தொடர்ந்து கடந்த 27-ம் தேதி வந்துள்ளனர். அப்போதும் கோவில் பூட்டப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று 29-ம் தேதி மீண்டும் கோவிலுக்கு வந்து பார்த்தப்போது கோவிலின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் பொறுப்புகளை எடுத்து கொள்ளப்போவதாக அறிவிப்பு நோட்டிஸ் ஒட்டப்போவதாக கூறினர்.
மேலும், இதுசம்மந்தமாக எதுவும் பிரச்சனை வராமலிருக்க பாதுகாப்பு அளிக்கும்படி துவாக்குடி காவல் நிலையத்திற்கு இந்து அறநிலையத்துறையினர் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் கோவிலுக்கு வந்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தனர் .
இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி மக்கள், யார் புகார் கொடுத்தார்கள்? அப்படி புகார் கொடுத்திருந்தால் அந்த புகாரின் மீது எங்களை அழைத்து விசாரணை செய்திருக்க வேண்டும்? அதை விடுத்து எப்படி கோவில் நிவாகத்தை நீங்கள் கையகப்படுத்த வருவீர்கள்? பல ஆண்டுகளாக நாங்கள் நிர்வகித்து வரும் கோவிலை புதிதாக கட்டி பராமரித்து வருகிறோம். ஆனால், நீங்கள் வந்து இந்து அறநிலையத்துறை எடுத்து கொள்கிறேன் என்றால் என்ன அர்த்தம்? என்று கேள்வி கேட்டதோடு, அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பரப்பரபு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்கு வாதம் நடந்தது. அதன் பின்னர் ஒரு வழியாக சமரசம் பேசி முடித்தனர்.
அதனைத் தொடர்ந்து கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் முன்னாள் நிர்வாகி பொறுப்பை ஒப்படைக்காததால், மலைக்கோவில் செயல் அலுவலர் ஹேமாவதி தக்காராக சுயமாக அதன் பொறுப்பை 29-ம் தேதி மதியம் 12 மணி முதல் எடுத்து கொள்கிறார் என்றும், அதற்கு அறிவிப்பு நோட்டிஸ் ஒட்டபடுவதாகவும், இந்த கோவிலின் சம்மந்தமாக எவ்வித விசயங்களுக்கும் மலைக்கோவில் செயல் அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த உத்தரவை மீறி கோவில் விவகாரத்தில் யாரேனும் செயல்பட்டால், சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு நோட்டிசை ஒட்டியப் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
-ஆர்.சிராசுதீன்.