திருச்சி, திருவெறும்பூர் பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL) நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் வேலையை BHEL நிர்வாகம் காண்ராக்ட் தொழிலாளர்களை வைத்து செய்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து BHEL அனைத்து தொழிற்சங்ககள் சார்பில் வாயிற்கூட்டம், ஆர்பாட்டம், தொடர் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு பேரராட்டங்கள் நடத்தப்பட்டது.
ஆனால், இதனை BHEL நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு BHEL தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் எத்திராஜ் தலைமை வகித்தார். மனித சங்கிலி போராட்டமானது BHEL மெயின் கேட்டிலிருந்து, ஆர்.எஸ்.பி. கட்டிடம் வரை நடைப்பெற்றது. இந்த போராட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
-ஆர்.சிராசுதீன்.