இலங்கையில் இரனதீவுக்கு தெற்கு கடல் பகுதியில் வெடி பொருட்கள் பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 படகுகள், 11 வலைகள், 11 ஜோடி நீர் மூழ்கி காலனிகள், 11 நீர் மூழ்கி முகமூடிகள் மற்றும் 29 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஆகியன சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி கடற்தொழில் வளங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-என்.வசந்த ராகவன்.