3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தில், 64 கிராம் எடை கொண்ட உலகின் மிகச்சிறிய ‘கலாம்சாட்’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கி, அதனை நாசா அமைப்பின் மூலம் விண்ணில் செலுத்திய “ஸ்பேஸ் கிட்ஸ்” அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இன்று காலை தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ரிபாத் சாருக் மற்றும் அவரது குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டார்.
-கே.பி.சுகுமார்.