இந்தியா – இஸ்ரேல் உறவுக்கு வானம் எல்லை இல்லை; எங்களின் 70 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பெருமிதம்.

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று மாலை 6.30 மணியளவில் இஸ்ரேல் பென் குரியன் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு விமான நிலையத்திற்கு நேரில் வந்து வரவேற்றார். இஸ்ரேல் மரபுப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

விமான நிலையத்தில் இருதலைவர்களும் பேசினர். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது:

இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம். இந்திய கலாச்சாரம், வரலாறு, ஜனநாயகம், எங்களுக்கு மிகவும் பிடிக்கும். பிரதமர் நரேந்திர மோதி எனது நண்பர், அவரை வரவேற்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். 70 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது. மிகச்சிறந்த பெரும் மற்றும் நல்ல தலைவர்களில் ஒருவர். மேக் இன் இந்தியா என்பதுடன், நாங்கள் மேக் வித் இந்தியா என இருக்கிறோம். நமது உறவுக்கு வானம் எல்லை இல்லை. இன்னும் நமது உறவுகள் விரிவாக்கம் பெறும். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பேசினார்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி பேசியதாவது:-

எனக்கு இங்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது இஸ்ரேல் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்ரேல் பழமையான கலாச்சார நாடாக இருந்த போதிலும், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொண்டது. இஸ்ரேல் வந்தது குறித்து பெருமை அடைகிறேன். பயங்கரவாதம் உள்ளிட்ட சவால்களிலிருந்து நாடுகளை பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கிறது. இஸ்ரேல் இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளியான நாடு. இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி பேசினார்

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் வருகையையொட்டி பென் குரியன் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்து

-எஸ்.சதிஸ் சர்மா.