திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில், ஆரணி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக வருமான வரி மற்றும் GST வரி விதிப்பு கூட்டமும், செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய விளக்க உரை கூட்டம் 04.07.2017 மாலை 3.40 மணியளவில் மதுரம் அரங்கத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம் வேலூர் நகர அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் C.S. நாராயணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வருமான வரி துறை அதிகாரிகள் D.தனசேகரன், C.சிந்தலா சியாம்பிரசாத் மற்றும் பட்டைய கணக்காளர், D.K..மனோகரன், வேலூர் நகர அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் S.ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டு வருமான வரி மற்றும் GST வரி விதிப்பு செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி விளக்க உரை ஆற்றினார்கள்.
இக்கூட்டத்தில் வேலூர் நகர அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் K.செங்கீரன் இணை செயலாளர்கள் D.வில்வநாதன், E.சலீம்பேக், S.கணேஷ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் K.S.சிவகுமாரன், கௌரவ தலைவர் S.செந்தில்நாதன், மாவட்ட துணை தலைவர்கள் S.செல்வம், D.அருளாளன், ஹாஜி A.S.K. சுபானி மற்றும் 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டு வருமான வரி மற்றும் GST வரி விதிப்புக்கான விளக்கங்கள் மற்றும் சந்தேகங்களை கேட்டறிந்தார்கள்.
–மு. ராமராஜ்.