இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக கூறி 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

SLNSLN1 SLN2 SLN3

இலங்கை கடல் எல்லைக்குள் டெல்ஃப்ட் தீவுக்கு வடமேற்கில் மீன் பிடித்ததாக கூறி 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை 05.07.2017 அன்று கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், படகோட்டிகள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்களை சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

-என்.வசந்த ராகவன்.