திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்நகரம்பேடு காலனி பகுதியில் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள் பழுதடைந்து உள்ளது. இதை போர்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டிய உள்ளாட்சி நிர்வாகம், 8 மாதங்களாகியும் இதுவரை சரிசெய்ய வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடி நீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
இதுக்குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வெறுத்துப்போன அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்; அரசு பேருந்தை மறித்து சிறை பிடித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும் பெரணமல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் புனிதா ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.
2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தின் பேரில், பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
-ச.ரஜினி காந்த்.