இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கபிலா வைடயாரட்னவை, இலங்கை கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன இன்று (ஜூலை 11) நேரில் சந்தித்து பேசினார்.
தேசிய நலன்களை பாதுகாப்பதில் கடற்படையின் பங்கு பற்றி சில கருத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயலாளருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு, அமைச்சகத்தின் முடிவுகளின் வெற்றிக்காக இலங்கை கடற்படை தொடர்ச்சியாக பாடுபடும் என்றும் இலங்கை கடற்படை தளபதி உறுதியளித்தார்.
-என்.வசந்த ராகவன்.