அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி மாடுக்கு மனு கொடுக்கும் போராட்டம்! -திருவெறும்பூர் பேருந்து நிறுத்தில் நடைப்பெற்றது.

S2840008 S2840009 S2840012

திருச்சி மாநகராட்சியின் 65-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாக்கடை நீர் கலந்த குடிநீர் வருகிறது. மேலும், கழிவு நீர் சாக்கடை உடைந்து கழிவு நீர் ஓடாமல் கொசு உற்பத்தியாகி பொது மக்களுக்கு நோய்கள் பரப்புகிறது. 

திடகழிவு மேலாண்மை குப்பை சேகரிப்பு வரி ரூ.60 என்று மக்களுக்கு தெரியாமல் மாநகராட்சி நிர்வாகம் எதற்காக வசூழிக்கிறது?

பழுதடைந்துள்ள உய்யகொண்டான் கரை சாலையை சரி செய்யவில்லை. ஆனால், அந்த சாலைக்கு வரி மட்டும் மாநகராட்சி நிர்வாகம் வசூழிக்கிறது. உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகளை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து கொடுக்க வலியுறுத்தி பல முறை மனு கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை .

அதேப்போல் பொது வினியோக துறையில் செல்வபுரத்தில் 2 ஆயிரம் குடும்ப அட்டைக்கு ஒரு நியாய விலை கடையே உள்ளது. இதனால் பொது மக்கள் சிரமம் அடைகின்றனர். அதனால் அந்த கடையை இரண்டாக பிரிக்க வேண்டும். அனைவருக்கும் பாரபட்சமின்றி உணவு பொருட்கள் வழங்க வேண்டும். பதுக்கல் செய்யகூடாது. தேவையில்லாத சோப்பு, ரவை போன்ற பொருட்களை வாங்கும் படி கடை ஊழியர் நிர்ப்பந்திக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாடுக்கு மனு கொடுக்கும் நுதனப் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஈடுப்பட்டனர்.

இப்போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் தலைமை வகித்தார். விவசாய சங்க மாநகர் மாவட்ட தலைவர் பாண்டியன், செல்வபுரம் கிளை செயலாளர் தஸ்தகீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

-ஆர்.சிராசுதீன்.