திருச்சி, திருவெறும்பூர், கூத்தைபார் அருகே உள்ள பெரியகுளத்தின் கரையோரத்தில் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்க தக்க பெண், ஆடைகள் கலையப்பட்டு அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பெண் மஞ்சள் நிறத்தில் சட்டையும், கத்திரிபூ கலரில் சேலையும், அஜந்தா கலரில் பாவாடையும் அணிந்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் ஆடைகள் கலையப்பட்ட நிலையில் அலங்கோலமாக இருந்தது. அதனால் அந்த பெண்ணை யாராவது கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து வீசியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இதுக்குறித்து திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பலக்கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
சமீப காலமாக திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டப்பகலிலேயே திருட்டு, செயின் பறிப்பு மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
எனவே, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்தால்தான் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும்.
-ஆர்.சிராசுதீன்.