பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திருச்சி திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
10, 20, 30 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய தேக்கநிலை ஊதியத்தை நிலுவையுடன் வழங்க வேண்டும்.
8-வது ஊதிய குழுவை அமல்படுத்தி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குவதோடு இடைகால நிவாரணம் 20 சதவீதம் வழங்கவேண்டும்.
தமிழகத்தில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும்.
மகபேறு விடுப்பு 270 நாள் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
சத்துணவு மையங்களில் 2013-ஆம் ஆண்டு முதல் தேங்கி கிடக்கும் காலி சாக்குகளை எடுக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு கொடுப்பது என்றும், 5-ம் தேதி சென்னை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பிரன்சிஸ், அழகு ராணி, புவனேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
-ஆர்.சிராசுதீன்.