அமெரிக்க  மற்றும் ஜப்பான் நாட்டு தூதர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை சந்தித்தார்கள். 

pr140717h

தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று (14.7.2017) தலைமைச் செயலகத்தில், புதுடெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைவர் (பொறுப்பு) மேரிகேய் எல்.கால்சன், இந்தியாவிற்கான அமெரிக்க நாட்டு தூதர் (முறைப்பணி) டேவிட் பாலார்டு, சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார அலுவலர் கென்னெத் மெக்பெரைட் ஆகியோர் சந்தித்தார்கள்.

pr140717g

மேலும், இந்தியாவிற்கான ஜப்பான் நாட்டு தூதர், கேன்ஜி கிராமெட்சூ, டெல்லியிலுள்ள ஜப்பான் தூதரகத்தின் அமைச்சர் ஹிடிகி அசாரி, செயலாளர் கோஜி இடோ, சென்னையிலுள்ள ஜப்பான் நாட்டு தூதர் சிஜி பாபா ஆகியோரும் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை இன்று சந்தித்தார்கள்

-ஆர்.மார்ஷல்.