வேலூர் மாவட்டம், ஆற்காடு தாலுக்கா, திமிரி பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று கர்ம வீரர், ஏழை பங்காளன், கருப்பு காந்தி, படிக்காத மேதை என்றெல்லாம் அழைக்கப்படும் பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கவேண்டுமென தமிழக அரசு அறிவித்ததின் காரணமாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவானது தலைமை ஆசிரியை விஜய குமாரி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழா கலை நிகழ்ச்சிகளோடு ஆரம்பமானது. இக்கலை நிகழ்ச்சியில் மாணவிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தலைமை ஆசிரியையின் சிறப்புரையே இவ்நிகழ்ச்சியின் துவக்க உரையாக அமைந்தது. நல்ல துவக்கமே நல்ல முடிவை தரும் என்ற வாக்கிற்கு எடுத்துகாட்டாக இவ்வுரை இடம் பெற்றது.
இப்பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளும் கலந்து கொண்டு இவ்விழாவிற்கு மேலும் மெருகூட்டினர். அதுமட்டும் அல்லாமல் இருபால் ஆசிரியர்களும், மாணவிகளின் திறமைகள் வெளிபடுவதற்கு உறுதுணையான இருந்து தங்களது பங்களிப்பை வழங்கினர். மேலும், இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை பரிசுகள் வழங்கி மகிழ்வித்தார்.
-மு ராமராஜ்.