திருச்சி, திருவெறும்பூர் வட்டார வருவாய்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி!

IMG_3218

தமிழகம் முழுவதும் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது. அதன் ஒருப்பகுதியாக திருச்சி, திருவெறும்பூர் வருவாய்துறை சார்பில் நடந்த வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வுப்  பேரணிக்கு, திருவெறும்பூர் வட்டாட்சியர் ஷோபா தலைமை வகித்து, வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் வருவாய் ஆய்வாளர் கீதா முன்னிலை வகித்தார்.

பேரணியில் துவாக்குடி அண்ணாவளைவு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணவு குறித்த வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்தியும், வாக்களர் சேர்ப்பதின் அவசியம் குறித்தும் கோஷங்களை எழுப்பினர். இப்பேரணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சுப்பிரமணி, அந்தோணிராஜ், செல்வகணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணி  துவாக்குடி அண்ணாவளைவு நேதாஜி நகரிலிருந்து தொடங்கி அரசு பாலிடெக்னிக்  கல்லூரி வரை நடைப்பெற்றது.

-ஆர்.சிராசுதீன்.