சேலம் மாவட்டம். ஏற்காட்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரியின் ஆலோசணைபடி மாற்றுத்திறன் கொண்ட 18 வயதுக்குட்பட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் அரசு மருத்துவமணையில் நடைப்பெற்றது.
மருத்துவர்கள் குமார் மற்றும் செல்வம் குழந்தைகளை பரிசோதித்து, அவர்களுக்கான மருந்துகளை வழங்கினர்.
ஏற்காடு உதவி தொடக்க கல்வி அலுவலர் ஷேக் தாவூத் மற்றும் உதவி திட்ட அலுவலர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
அவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. முகாமில் கலந்துக்கொண்ட குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கவும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
இந்த முகாமில் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் 74 பேர் கலந்துக்கொண்டனர். 19 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க ஏற்காடு மேற்பார்வையாளர் வைத்தியப்பன், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரிஸ்வான் ஆகியோர் செய்திருந்தனர்.
-நவீன் குமார்.