திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரப்பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைகான விழிப்புணர்வு ஊர்வலம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், இன்று (21.07.2017) காலை 10.00 மணி அளவில் செய்யார் வருவாய் கோட்டாட்சியர் பொ.கிருபானந்தம் தலைமையில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.அரிக்குமார் முன்னிலையில், செய்யார் வட்டாட்சியர் வி.ஜெயராமச்சந்திரன் வாக்காளர் சேர்க்கைகான விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலம் செய்யார் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, காந்தி சாலை வழியாக பெரியார் சிலை வரை நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் செய்யார் அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
–மு.ராமராஜ்.
–ச.ரஜினிகாந்த்.