பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 22.07.2017 இன்று காலை 10.00 மணி அளவில் திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைப்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர்/இணை இயக்குநர் பா.ஜெயசுதா வரவேற்புரையாற்றினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் விழாவினை துவக்கி வைத்து விழா பேருரை ஆற்றி இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினார்கள் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில் 26-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்பில்லாத மற்றும் பட்டதாரி இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டனர். இதில் 1,500 இளைஞர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.
இவ்விழாவில் உதவி திட்ட அலுவலர்கள் C.T.நாராயணசாமி, V.முருகானந்தம், A.ஸ்ரீபாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், அரசு அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக மகளிர் திட்ட உதவி அலுவலர் Y.ஜான்சன் நன்றியுரை வழங்கினார்.
-மு. ராமராஜ்.
-ச. ரஜினிகாந்த்.