இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்டதாக 8 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

IF IF1 SLN

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்டதாக கூறி 8 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று (ஜூலை 21) அதிகாலை 3 மணிக்கு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் ஏனைய மீன் பிடி உபகரணங்கள் காங்கேசன் துறைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் பிறகு அவர்களை சட்ட நடவடிக்கைக்காக  யாழ்ப்பாண உதவி மீன்பிடி இயக்குநரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, மீன்பிடிப்பதற்காக இயந்திரப் படகில் சென்றவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

-என்.வசந்த ராகவன்.