சேலம் மாவட்டம், ஏற்காடு மாண்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 101 -வது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
மாண்ட்போர்ட் பள்ளியின் முன்னாள் மாணவரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ரவிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். விழாவின் முதல் நிகழ்வான அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினரும், பள்ளியின் முதல்வர் அருட்சகோ. சூசை அலங்காரமும் ஏற்றுக்கொண்டனர்.
பள்ளியின் முன்னாள் மாணவர்களின் அணிவகுப்பும் நடைப்பெற்றது. மாணவர்களுக்கு ஓட்டம், தொடர் ஓட்டம், நீச்சல் உள்ளிட்ட போட்டிகள் நடைப்பெற்றன. பிற்பகல் மாணவ, மாணவிகளின் நடனம் உள்ளிட்ட கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. மாணவர்களின் உடல்மெல்லசைவு நடனத்தில் பள்ளியின் 101-வது ஆண்டு விளையாட்டு விழாவை வலியுறுத்தும் விதமாக இருந்தது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் ரவிராஜா மற்றும் அவரது மனைவி ரமாமணி ஆகியோர் கேடயங்கள் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கினர். தடகளம் மற்றும் டிரில் டிஸ்பிளேவிற்கான கேடயத்தை கேபரியல் அணியும், நீச்சல் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பேட்ரிக் அணியும், நல்லொழுக்கம் மற்றும் மாணவியருக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மாண்ட்போர்ட அணியும் தட்டி சென்றனர்.
விழாவில் பள்ளியின் காசாளர் அருட்சகோ.அகஸ்டின், மற்றும் அருட்சகோதரர்கள் செபாஸ்டியன், ஜானிராஜன், பள்ளியின் முன்னாள் முதல்வர்கள் அருட்சகோதரர்கள் ஜார்ஜ், ஜோசப் லூயிஸ் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.
விழாவின் ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் அருட்சகோ. சூசை அலங்காரம் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
-நவீன்குமார்.