திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்!

Cloud 4G Star_20170725_105004Cloud 4G Star_20170725_105638 Cloud 4G Star_20170725_105603

இந்திய கம்னிஸ்ட் கட்சி சார்பில் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், விவசாயிகள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், 60 வயது நிரம்பிய அனைவருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வுதியம் வழங்க வேண்டும், இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் இன்று நடைப்பெற்றது.

மறியில் போராட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் பால் பண்ணை முதல் துவாக்குடி வரை திருச்சிதஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும்.

வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனையும் அதில் அவர்கள் வீடு கட்டி கொள்ள ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு அரசங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டமான்பட்டி பூசாரி தெருவிற்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாலை வசதி இல்லாததை கண்டித்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் திருச்சிதஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

-ஆர்.சிராசுதீன்.