இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக இன்று மதியம் 12 மணியளவில் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் ராஜ்காட் சென்று, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர் குடியரசு மாளிகை சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்.
பின்னர் இருவரையும் ஒரே காரில் பாராளுமன்ற மைய மண்டபத்திற்கு குதிரைப்படை வீரர்கள் அழைத்து வந்தனர். அங்கு, ராம்நாத் கோவிந்தை துணை குடியரசுத் தலைவர் எம்.எம்.ஹமித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோதி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்றனர்.
12.15 மணியளவில் ராம்நாத் கோவிந்திற்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் எம்.எம்.ஹமித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், தமிழக முதல்வர் கே. பழனிசாமி உட்பட பல மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
படங்கள் : எஸ்.சதிஸ்சர்மா.