மாட்டு வண்டிகளுக்கு தனி மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி பேட்டி..

IMG_3473திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழாவிற்கு திருவெறும்பூர் தாசில்தார் ஷோபா தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

மழை மற்றும் தண்ணீர் இல்லாமல் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் பல இடங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படுகிறது. தமிழக முதல்வர் கிராமங்கள் மற்றும் நகர் புறங்களில் நிகழும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க போதுமான நிதியை ஒதுக்கி தந்துள்ளார்.

தற்போது 12 கோடி நிதி ஒதுக்கபட்டு போர்வெல், ஆழ்குழாய் கிணறு, திறந்த வெளி கிணறு, குடிநீர் இணைப்பு குழாய் நீட்டிப்பு செய்யபடுவது போன்ற பணிகள் நடைப்பெற்று வருகிறது. மேலும், அனைவருக்கும் குடிநீர் இணைப்பு கிடைக்க சம்மந்தபட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பத்தாளப் பேட்டையில் மோட்டர் மூலம் அனுமதியில்லாமல் சிலர் குடிநீர் எடுப்பதால் பொது மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

அனுமதியில்லாமல் குடிநீரை மோட்டர் மூலம் எடுப்பவர்களை, திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரும், ஊராட்சி செயலரும் முழுமையாக தடுத்து நிறுத்தி, அனைவருக்கும் குடிநீர் கிடைக்க இரண்டு நாளில் வழி செய்வேண்டும்.. இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு அதிகாரிகளை எச்சரித்தார்.

மேலும், குளங்களில் இருந்து பாசன வாய்கால் வெட்டுவதற்காக ரூ16.38 லட்சம் ஊரக வளர்ச்சி துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதம மந்திரி இலவச வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டத்திற்கு 5 ஆயிரத்து 48 வீடுகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும், ஒரு வீடு கட்டுவதற்கு 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பு என்றும், ஆதி திராவிடர்கள் வீடு வேண்டும் என்றால், அதற்குரிய ஆவணத்துடன் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டால் கட்டி தரப்படும் என்றார்.

பத்தாளப்பேட்டையில் உள்ள மேல மற்றும் கீழக்குளங்களை தூர்வாறித்தரும்படி கேட்டுள்ளனர் அதற்கு உலக வங்கி திட்டத்தின் மூலம் தூர்வாரப்படும். அதுப்போல் கால்நடைகள் அதிகம் உள்ளதால் கால்நடை மருத்துவமனை வேண்டுமென பொது மக்கள் விடுத்துள்ள கோரிக்கை ஏற்கப்பட்டள்ளது. அதற்குறிய ஆய்வு செய்து விரைவில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும்.

விவசாயிகளின்  பயிர் காப்பீடு அக்ரிகல்சர் இன்ஸ்சூரன்ஸ் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.21 கோடி வந்துள்ளது. அந்த தொகையை காப்பீடு செய்தவர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், வராதவர்கள் பற்றி கணக்கு எடுத்து முழுமையான இழப்பீட்டு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும். மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதி அளிப்பின் திட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் வேலை செய்வதற்கு அட்டை வாங்கி கொள்ளலாம். அவர்களுக்கு வாரத்தில் 5 நாட்களாவது வேலை கொடுக்க வேண்டும். சுழற்சி முறை என்பது கிடையாது. அப்படி யாராவது கூறினால். வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ, என்னிடமோ புகார் தெரிவிக்கலாம்.

மேலும், இந்த திட்டத்தின் மூலம் நிலம் மேம்பாடு, வரப்பு கட்டுதல் செய்ய விரும்புவோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து பயனடையலாம்.

100 நாள் வேலை மூலம் கிராமப்பகுதி தூய்மையாக இருக்க திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ 12 ஆயிரத்திற்கு தனிநபர் கழிப்பிடம் கட்டி கொள்வதற்கு வழங்குகிறது.

திருச்சி மட்டுமல்லாது, எல்லாப் பகுதிகளிலும் கடுமையான வறட்சியின் காரணமாக குடிநீரை சேமித்து வைப்பவர்கள் மூடி வைக்காததால், கொசுக்கள் உற்பத்தியாவதுடன் அதன் மூலம் டெங்கு காய்ச்சல் வருகிறது. இதனால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வதற்கு மக்கள் நல்வாழ்வுதுறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது இந்த மனுநீதி நாள் நிறைவு விழாவில் ஆயிரத்து 116 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 40 ஆயிரம் செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக கூறினார். இதில் விடுப்பட்டவர்கள் மனுக்கொடுத்தால் அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.

மேலும், அரசங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டமான்பட்டி பொது மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை வசதி இல்லாமல் வயல் பகுதியில் நடந்து வருதாகவும், அதனால் சாலை வசதி கொடுக்க வேண்டுமென கூறி படத்துடன் கூடிய புகார் மனு கொடுத்துள்ளனர். அவர்கள் சாலை கேட்கும் பகுதி தனியார் சிலருக்கு சொந்தமான விவசாய நிலமாக உள்ளது. மேலும், கிருஷ்ண சமுத்திரம் பகுதியாக இணைப்பு சாலை உள்ளதாக கூறுகின்றனர். தொண்டமான்பட்டி மக்களுக்கு பாதை அமைப்பதற்கு போதிய நிதி வழங்க தயக்கமில்லை. அந்த பாதை அமைப்பது உறுதியானால், ஒரு வாரம் முதல் 15 நாட்களில் சாலைப்பணி அமைக்க நடவடிக்கை தொடங்கப்படும்.

IMG_3486மேலும், நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பக்தவச்சலம் நகர் இளைஞர் வேலை வாய்ப்பு படிப்பகம் அமைப்பதற்கு 6.45 லட்சம் செலவாகும். அதற்கு ஊர்மக்கள் பங்கு தொகையாக 2.15 லட்சத்திற்கான நிதிக்கான காசோலையை வழங்கியுள்ளனர். மீதம் உள்ள இரண்டு மடங்கு தொகையை அரசு வழங்கும். இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி தெரிவித்தார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

IMG_3370இந்த விழாவில் அனைத்து துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அதில் பயன் பெறுவதற்கு உரிய தகுதிகள் குறித்தும் விளக்கி பேசினார்கள்.

IMG_3510பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி மரக்கன்றுகளை நடவு செய்ததோடு, முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் வைக்கபட்டிருந்த கண்காட்சிகளை பார்வையிட்டார்.

இந்த விழாவில் பல்வேறு துறை அரசு அதிகாரிகளும், ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜாமணி கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் 245 ஏரி குளங்களில் விவசாயத்திற்காக மண் எடுக்கப்படுவதாகவும், தற்போது வரை 3 லட்சத்து 50 ஆயிரம் கன மீட்டர் அளவிற்கு மண் எடுக்கபட்டுள்ளதாகவும், திருவெறும்பூர் பகுதியில் குளங்களில் மண் எடுப்பதில் முறைகேடு நடப்பதாக புகார்கள் வந்துள்ளதின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும், விவசாயம் தவிர மற்ற பணிகளுக்கு மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்று கூறினார் .

விவசாயம் பொய்து போயுள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதராத்தை காக்கும் பொருட்டு திருவெறும்பூர் பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு திருவெறும்பூர் பகுதியில் தனி குவாரி அமைப்பது குறித்து கேட்டதற்கு, திருச்சி மாவட்டத்தில் 13 மணல் குவரிகள் உள்ளது. அதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதோடு, மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நாள்தோறும் 5 ஆயிரம் லோடுக்கு மேல் மணல் எடுக்கப்படுவதாகவும், மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதற்கு உரிய இடங்கள் மற்றும் தேவைகளை ஆராய்ந்து வருவதாகவும் அதன் அடிப்படையளில் இன்னும் ஒர் இரு தினங்களில் மாட்டு வண்டிகளுக்கு தனி மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.

மேலும், அம்மா சிமெண்ட கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பொது மக்களுக்கு கிடைக்காதது குறித்து கேட்டதற்கு, அம்மா சிமெண்டிற்கு அரசு புதிய விலை நிர்ணயம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், அந்த விலை நிர்ணயம் செய்த பின் அம்மா சிமெண்ட வழங்கப்படுமென்றார்.

மேலும், போர்வெல் மூலம் மினி சின்டெக்ஸ் தொட்டிகள் வைத்து குடிநீர் வழங்குவதில் திருவெறும்பூர் பகுதியில் 80 சதவீதம் பைப்புகள் செயல்படுவதில்லை என்றும், அதை செயல்படுத்ததவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டதற்கு, நடவடிக்கை முடியாது; ஏன் என்றால், தண்ணீர் மட்டம் கீழே போய்விட்டது என்றார்.

 60 வயது மூதாட்டியின் ஆதங்கம்:

பத்தாளப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கோட்ராப்பட்டியை சேர்ந்த 60 வயதிற்கும் மேற்பட்ட சிவானந்தவள்ளி  ஆதங்கத்துடன் பேசியதாவது, எனது மகன் ஒரு லட்சம் ஊதியம் பெறுகிறார். நான் தனியாக உள்ளேன். எல்லோரும் எல்லாத்தையும் பேசினார்கள் ஆனால், பத்தளாப்பேட்டைக்கு உட்பட்ட கோட்ராப்பட்டியில் குடிநீர், சாலைவசதி, தெருவிழக்கு கழிவு நீர் வடிகால் வசதி என எந்த வசதியுமில்லை என்றும், மேலும், குடி தண்ணீரை மோட்டார் போட்டு சிலர் எடுப்பதால் குடிநீர் கிடைக்க வில்லை என்று இதை கேட்டதற்கு என்னிடம் தகறாறு செய்வதுடன், போலீசில் எனது மேல் புகார் கொடுக்கின்றனர். எனது ஊர் கேவலமாக உள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டுமென்று ஆதங்கத்துடன் கூறினார்.

-ஆர்.சிராசுதீன்.