கடந்த 2015 ஆண்டு பெய்த கனமழையின் போது, சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதை மற்றும் வாழவந்தி பஞ்சாயத்திற்கு செல்லும் சாலைகள் மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்தன. இந்த பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன.
இதனால் வாழவந்தி கிராமம் வழியாக கொட்டச்சேடு செல்லும் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டு, போட்டுக்காடு கிராமம் வழியாக கொட்டச்சேட்டிற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால் வாழவந்தி பஞ்சாயத்திற்குட்பட்ட செங்காடு, கீரைக்காடு, வாழவந்தி, புத்தூர், அரண்மனைக்காடு, புளியங்கடை, கும்மிப்பாடி, பாரக்கடை, சேட்டுக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கும், மக்கள் ஏற்காடு செல்வதற்கும் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது.
இதனால் காலை மற்றும் மாலை என தினசரி தலா இருமுறை மட்டும் ஏற்காட்டில் இருந்து போட்டுக்காடு, கொட்டச்சேடு, ஆத்துப்பாலம் வழியாக வாழவந்தி கிராமத்திற்கு பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நவீன் குமார்.