திருச்சி வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தி.மு.க. மாவட்ட கழகம் சார்பில் திருச்சி துவாக்குடியில் சிறப்பான வரவேற்பு.

IMG_3632 IMG_3625

தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சந்தித்து விட்டு, அந்த திட்டத்திற்காக போராட்டம் நடத்தியவர்களை  காவல்துறையினர் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை சந்திப்பதற்காக தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தஞ்சையிலிருந்து திருச்சிக்கு வந்தார்.

அவரை திருச்சி எல்லையான துவாக்குடி சுங்கசாவடி அருகே, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செயலாளர் நேரு தலைமையில் தி.மு.க.வினர் வரவேற்றனர்.

இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.என்.சேகரன், அன்பில் பெரியசாமி, மாநகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.எம்.கருணாநிதி, நவல்பட்டு விஜி, துவாக்குடி நகர செயலாளர் காயம்பு, லால்குடி நகர செயலாளர் துரைமாணிக்கம், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் செந்தில் மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.