திருச்சி, திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்கள் செய்ய வேண்டிய பணிகளை ஒப்பந்த பணியாளர்களை கொண்டு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரத மஸ்தூர் சங்கம் சார்பில் ஒரு நாள் தொடர் தர்ணா போராட்டம் பெல் மெயின் கேட் முன்பு நடைப்பெற்றது.
பெல் பாரத மஸ்தூர் சங்க செயல் தலைவர் விசாகுமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வெங்கடேசன் தர்ணா போராட்டதை துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் சங்கர் சிறப்புறையாற்றினார். தர்ணாப் போராட்டத்தில் பெல் நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் செய்ய வேண்டிய பணிகளை பெல் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு செய்வதை கண்டித்தும், கடந்த 29-ம் தேதி ஒப்பந்த தொழிலாளர்கள் 35 பேரை பெல் நிர்வாகம் நியமித்துள்ளதை கண்டித்தும், தொடர் தர்ணாப் போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தில் பாரத மஸ்தூர் சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
-ஆர்.சிராசுதீன்.