லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக வி.கே.ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். வி.கே.ஜெயக்கொடி வகித்து வந்த எரிசக்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பை விக்ரம் கபூர் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் கபூர் தற்போது எரி சக்தித் துறைச் செயலாளராக உள்ளார்.
உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி இது நாள்வரை லஞ்ச ஒழிப்பு ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று பிறப்பித்துள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com