வேறு சாதி பெண்ணை காதலித்த வெங்கடேசன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்பாட்டம்!

IMG-20170805-WA0022 IMG-20170805-WA0018திருவண்ணாமலை மாவட்டம், செய்யாரில் புளியரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வேறு சாதி பெண்ணை காதலித்து வந்ததால் பிரச்சனைகள் ஏற்பட்டு, சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர் குடும்பங்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் சூறையாடியதை கண்டித்தும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டண ஆர்பாட்டம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், செய்யாரில் உள்ள ஆரணி கூட்ரோடு பேருந்து நிறுத்தும் அருகில் 04.08.2017 அன்று மாலை 5.00 மணிக்கு நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-மு.ராமராஜ்.
-ச.ரஜினிகாந்த்.