திருவண்ணாமலை மாவட்டம், செய்யாரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி துரோணா பப்ளிக் பள்ளி சார்பாக செய்யாரில் உள்ள ஆரணி கூட்ரோடு பேருந்து நிறுத்தும் அருகே இன்று (05.08.2017) காலை 10.30 மணி அளவில் நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை இயக்குநர் கோவிந்தசாமி மற்றும் செய்யாறு வட்டாட்சியர் பழநி ஆகியோர் கலந்து கொண்டனர். செய்யாறு பொது மருத்துவமனை மற்றும் நாவல்பாக்கம், நெடும்பிறை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சார்ந்த மருத்துவக் குழுவினர் டெங்கு காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் பொருட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இவ்விழிப்புணர்வு முகாம் துரோணா பப்ளிக் பள்ளி சார்ந்த தாளாளர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது.
–மு.ராமராஜ்.
–ச.ரஜினிகாந்த்.