இந்திய குடியரசு துணை தலைவருக்கான தேர்தலில், ஆளும் பா.ஜ.க. சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தி பேரன் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.
இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று (05.08.2017) தேர்தல் நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இத்தேர்தலில், வெங்கய்யா நாயுடு வெற்றி பெற்றுள்ளார். வெங்கய்யா நாயுடுக்கு 516 வாக்குகளும், கோபால கிருஷ்ண காந்திக்கு 244 வாக்குகளும் கிடைத்துள்ளது.
வெற்றி பெற்ற வெங்கய்யா நாயுடுவுக்கு, பிரதமர் நரேந்திர மோதி உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com