திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (09.08.2017) காலை 10 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு தீணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இக்கல்லூரியில் பணிபுரியும் அலுவலர்களின் அலட்சியமே இத்தகைய தீ விபத்திற்கு காரணம் என தற்போது தெரியவந்துள்ளது. ஏனென்றால், இக்கல்லூரியில் முறையான பாதுகாப்பும், பராமரிப்பும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அறவே கிடையாது என்கின்றனர் மாணவர்கள்.
எனவே, சம்மந்தப்பட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகள் இதுபோன்ற பள்ளி மற்றும் கல்லூரிகளை குழு அமைத்து தொடர்ந்து கண்காணித்தால்தான் இதுபோன்ற ஆபத்துக்களில் இருந்து மாணாக்கர்களை காப்பாற்ற முடியும்.
-மு.ராமராஜ்.
-ச.ரஜினிகாந்த்.