ஏற்காட்டில் இன்று அதிகாலை 4 மணி முதல் மழை!- மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு!

IMG_8086

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இன்று அதிகாலை 4 மணி முதல் 9 மணி வரை சாரல் மழை பெய்தது. மதிய நேரத்தில் வெயில் நிலவியது. பின்னர் மாலை 6 மணிக்கு கனமழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது.

ஏற்காடு மலைப்பாதையிலும், படகு இல்ல சாலையிலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

-நவீன் குமார்.