இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி 12 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று (09 ஆகஸ்ட் 2017) கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 3 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண உதவி மீன்வளத் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.