டெங்கு காய்ச்சலால் மக்கள் அச்சம்!- திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் அலட்சியம்!

????????????????????IMG-20170811-WA0007

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நீர்ப்பத்துரை  பகுதிகளில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்காததால், மாவட்டம் முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

திருவண்ணாமலை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு எந்த ஒரு சிகிச்சையும் அளிக்காமல் அலைக்கழிக்கின்றனர்.

நோயாளிகளுக்கு உட்காருவதற்கு கூட  இடம் அளிக்காமல் நோயாளிகள் தரையில் அமர்ந்துள்ளனர்.

எனவே, சம்மந்தப்பட்ட தமிழக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-மு ராமராஜ்.
–ச. ரஜினிகாந்த்.