சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுமதி தேசிய கொடியை ஏற்றினார், ஆர்.ஐ,க்கள் வி.ஏ.ஓ.க்கள், கிராம உதவியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
ஏற்காடு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் அந்தோனி மைக்கேல்ராஜ் தேசிய கொடியை ஏற்றினார். உதவி காவல் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட காவலர்கள் கலந்துக்கொண்டனர்.
காந்தி பூங்காவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் மணி, மத்திய மாவட்ட துணை தலைவர் மேத்தா பாபு ஆகியோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தா.மா.கா. வினர் கலந்துக்கொண்டனர்.
காந்தி பூங்காவில் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெய் ஆனந்த் தேசிய கொடியேற்றினார். பின்னர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். காங்கிரஸ் கட்சியினர் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள வழங்கினர்.
ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் தாங்கள் வந்த பேருந்தில் கொடியேற்றி கொண்டாட்டம்.
ஆம்பூரில் இருந்து இரண்டு பேருந்துகளில் ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் சுதந்திர தின விழாவை ஏற்காடு மான் பூங்கா அருகில் உள்ள வாகன நிறுத்தத்தில் தாங்கள் வந்த பேருந்தில் குச்சி ஒன்றினை கட்டி அதில் கொடியேற்றினர். பின்னர் அங்கிருந்த சுற்லா பயணிகளுக்கும், மற்ற பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
-நவீன் குமார்.