போளுர் செங்குணம் ஊராட்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா!

IMG-20170815-WA0084 IMG-20170815-WA0089

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டம், செங்குணம் ஊராட்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (15.08.2017) காலை 08.40 மணி அளவில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் செங்குணம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.கே. ராமமூர்த்தி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் யாசின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினர்.

இவ்விழாவில் இராணுவ வீரர்கள் பாக்கியராஜ், பவுன்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் இருபாலர் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் பரிசுகளை வழங்கினார். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

                                       -மு.ராமராஜ்.