வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், திமிரி பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (15.08.2017) காலை 08.30 மணியளவில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது.
இதில் பள்ளி மேலாண்மை கல்விக்குழு தலைவர் லதா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் T.R.ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினர். இப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயகுமாரி மற்றும் இருபாலர் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டனர். விழாவில் பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுதந்திரத்தை ஒட்டிய சொற்பொழிவுகளை மாணவிகள் நிகழ்த்தினர். “ஆடம்பரமாக வாழும் மனிதனின் அன்பை விட, எளிமையாக வாழும் மனிதனின் அன்பே உயர்வானது“ என்ற கருத்தை உணர்த்தும் ‘தோற்றம்’ என்ற தமிழ் நாடகம் மாணவிகளால் நடித்து காண்பிக்கப்பட்டது.
ஏழு வண்ணங்களின் பெருமையை பகரும் ‘வானவில்’ என்ற ஆங்கில நாடகத்தின் மூலம் தங்களின் ஆங்கில மொழி திறமையை வெளிப்படுத்தினர். தேசபக்தி பாடலில் மாணவிகள் நடனங்கள் ஆடினர். மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை விஜயகுமாரி இனிப்புகள் வழங்கினார்.
–மு.ராமராஜ்.