தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் மாற்று திறனாளிகள் 115 பேருக்கு ரூ 4 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் வழங்கினார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு சாலையில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தலைமை வகித்தார்.
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 115 பேருக்கு ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில், 2 ஸ்கூட்டர், 20 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள், 20 பிரெய்லி கடிகாரம், 23 பேருக்கு மடக்கு ஊன்றுகோல், 19 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலி, 17 பேருக்கு ஊன்றுகோல் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ், திருச்சியில் பல பேருக்கு அரசியல் வழிகாட்டியாக இருந்த அன்பில் தர்மலிங்கத்தின் மகன் வழி பேரன். அதாவது, அன்பில் பொய்யாமொழியின் மகன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அவரது தாத்தா மற்றும் தந்தையை போன்றே எந்த பாரபட்சமுமின்றி மக்களோடு, மக்களாக இறங்கி மக்கள் பணியாற்ற முயற்சித்து வருவது உண்மையிலுமே வரவேற்கத்தக்கது.
-ஆர்.சிராசுதீன்.