காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தின் எதிரில், நேற்று (16.08.2017) அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்ற யாரும் அதைப்பற்றி கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அதைப் பார்த்து விட்டு அமைதியாக கடந்து சென்றனர்.
மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பொது இடத்தில் சக மனிதன் ஒருவர் அனாதையாக இறந்து கிடப்பதைகூட காவல்துறைக்கு தகவல் சொல்வதற்கு மனமில்லாமல் கடந்து சென்ற மனிதர்களை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது.
“இறந்து கிடப்பவர் அனாதை அல்ல; இதை கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற இந்த மனித சமூகம்தான் அனாதை” என்று சொல்ல தோன்றுகிறது.
வருவாய்துறை பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று கேட்க தோன்றுகிறதா? பாவம், அவர்களும் இந்த மனித சமூகத்தின் ஒரு அங்கம்தானே? அவர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்? கூலிக்கு மாரடிக்கும் அவர்களிடம் எப்படி மனிதாபிமானத்தை கூடுதலாக எதிர்பார்க்க முடியும்? தனிப்பட்ட முறையில் புகார் அளிக்கும் வரை அவர்களும் காத்திருந்தார்கள். இன்று காலை தான் அந்த உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக எடுத்து சென்றார்கள்.
–மு.ராமராஜ்.
-ச.ரஜினிகாந்த்.