இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் தற்போது லண்டனில் வசிக்கின்றனர்.
இவர்கள் சமீபத்தில் ஸ்ரீலங்காவுக்கு வந்துள்ளனர். நேற்று மாலை (17 ஆகஸ்ட் 2017) நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரியில் இவர்கள் படகு சவாரி செய்தபோது, எதிர்பாராதவிதமாக நீர்வீழ்ச்சியில் சிக்கி ஏரியில் தவறி விழுந்தனர்.
தகவலறிந்த இலங்கை கடற்படையினர், அவசர மீட்புக் குழுவை உடனே அனுப்பி வைத்தனர். ஏரியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த இரு இளம் பெண்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
-என்.வசந்த ராகவன்.