இலங்கை கடற்படையின் 21-ஆவது கடற்படை தளபதியாக ரெய்டர் அட்மிரல் டிராவிஸ் சின்னா நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி அதற்கான நியமன கடிதத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து, புதிய கடற்படை தளபதி டிராவிஸ் சின்னா நேற்று (ஆகஸ்ட் 18, 2017) பெற்றுக்கொண்டார்.
இலங்கை ஜனாதிபதி மாளிகையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில், இலங்கை ஜனாதிபதி செயலர் ஆஸ்டின் பெர்னாண்டோ மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கபிலா வைடயாரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
அட்மிரல் டிராவிஸ் சின்னா 11-வது கேடட் உட்கோட்டத்தில் 1982 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினுள் நுழைந்தார். வீரா விக்ரமா விபுஷணநாயகம், ராணா விக்ரம பதாக்கம மற்றும் ரணஷுரா பதாக்கம உட்பட பல பதக்கங்களை அவர் பெற்றுள்ளார்.
-என். வசந்த ராகவன்.