முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் இன்று (20.8.2017) மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதேபோல், சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-ஆர்.அருண்கேசவன்.