குப்பை குடோனை இடமாற்றம் செய்ய வேண்டும்!- ஏற்காடு ஜெரீனாக்காடு கிராம மக்கள் தீர்மானம்.

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

சேலம் மாவட்டம், ஏற்காடு டவுன் ஊராட்சிக்குட்பட்ட ஜெரீனாக்காடு கிராமத்தை ஒட்டிய பகுதியில் குப்பை குடோன் உள்ளது. ஏற்காடு கடை வீதி, தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் இருந்த குப்பைகள் இங்குள்ள குப்பை குடோனில்தான் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது.

இன்று (20.08.2017) காலை ஜெரீனாக்காடு கிராம மக்கள் அனைவரும் அங்குள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் கூடி இது குறித்து ஆலோசித்தனர். பின்னர் குப்பை குடோனை அரசு அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற இன்று மனு அளிப்பதாகவும், ஒரு வார காலத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், கிராம மக்களே குப்பை குடோனை அகற்றுவதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

-நவீன் குமார்.