கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு!-உடனடி சிகிச்சைக்கு உதவிய இலங்கை கடற்படையினர்!

SLN MEDICAL SLN MEDICAL1 SLN MEDICAL2 SLN MEDICAL3 SLN MEDICAL4

ஜூலை 14 –ம் தேதி பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற பன்னாட்டு மீன் பிடிப்பயணி ஒருவருக்கு, இன்று (20, ஆகஸ்ட் 2017) திடீர் என்று உடல் நலக்குறைவு (மாரடைப்பு) ஏற்பட்டது.

இது சம்மந்தமாக  பேருவளை போலிசாருக்கு கிடைத்த தகவலின்படி, இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனடியாக மருத்துவ சிகிச்சையளிப்பதற்காக அந்த நபரை காலி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக காலி, கராபிட்டிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

-என். வசந்த ராகவன்.