தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை; அதனை மத்திய அரசு மீற முடியாது: ஆதார் அடையாள அட்டை வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு!- உச்ச நீதி மன்ற உத்தரவின் உண்மை நகல் இணைப்பு.

Hon'ble Mr. Chief Justice Jagdish Singh Khehar.

Hon’ble Mr. Chief Justice Jagdish Singh Khehar.

Hon'ble Mr. Justice Jasti Chelameswar.

Hon’ble Mr. Justice Jasti Chelameswar.

Hon'ble Mr. Justice Sharad Arvind Bobde.

Hon’ble Mr. Justice Sharad Arvind Bobde.

Hon'ble Mr. Justice R.K. Agrawal.

Hon’ble Mr. Justice R.K. Agrawal.

Hon'ble Mr. Justice R.F. Nariman.

Hon’ble Mr. Justice R.F. Nariman.

Hon'ble Mr. Justice Abhay Manohar Sapre.

Hon’ble Mr. Justice Abhay Manohar Sapre.

Hon'ble Dr. Justice D.Y. Chandrachud.

Hon’ble Dr. Justice D.Y. Chandrachud.

Hon'ble Mr. Justice Sanjay Kishan Kaul.

Hon’ble Mr. Justice Sanjay Kishan Kaul.

Hon'ble Mr. Justice S. Abdul Nazeer .

Hon’ble Mr. Justice S. Abdul Nazeer .

Supreme CourtALL WP(C) No.494 of 2012 Right to Privacy1ALL WP(C) No.494 of 2012 Right to Privacy2 ALL WP(C) No.494 of 2012 Right to Privacy3

ALL WP(C) No.494 of 2012 Right to Privacy4aadhar

aadhar modi

ஆதார் அடையாள அட்டைக்கு தனி மனிதரின் உடல் ரீதியான அடையாளங்களை பதிவு செய்வது அடிப்படை உரிமையை மீறும் செயல் என்றும், தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்றும் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு  வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று (24.08.2017) வழங்கியுள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்குத்  தொடர்ந்துள்ளனர்.

இதுதொடர்பான பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கெஹார் தலைமையிலான அமர்வு முன் விசாரணையில் உள்ளன.

இந்த வழக்குகளில், ஆதார் அடையாள அட்டைகளுக்கு தனி மனிதரின் உடல் ரீதியான அடையாளங்கள் பதிவு செய்யப்படுவது, அரசியல் சட்டப்படி தனி மனித அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றஅடிப்படையில் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தனி மனித அடையாளங்களை பெறுவது அரசியல் சட்டப்படி அடிப்படை உரிமையா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்பட்ட பின்னர் ஆதார் அடையாள அட்டை தொடர்பான வழக்குகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கெஹார் தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்றும், அதனை மத்திய அரசு மீற முடியாது என்றும், 9 நீதிபதிகளும் ஒரு மித்த கருத்தை தீர்ப்பாக வழங்கியுள்ளனர்.

ALL WP(C) No.494 of 2012 Right to Privacy

இதை அடிப்படையாக கொண்டுதான் ஆதார் அட்டை வழங்குவது குறித்த பிற வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் தொடர்ந்து நடைபெறும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

 ullatchithagaval@gmail.com